இந்தியாவில் சில வாரங்களுக்கு முடக்குதல் நிலை அவசியம்:

அமெரிக்காவின் தொற்றுநோய் பிரிவின் தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி.


இந்தியாவில் பரவிவரும் கொரோன 2-வது அலையைக் கட்டுப்படுத்த உடனடியாக சில வாரங்களுக்கு முடக்குதல் நிலையை அறிவிக்க வேண்டும் என அமெரிக்காவின் தொற்றுநோய் பிரிவின் தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி தெரிவித்துள்ளார்.


''இந்தியாவில் மிகக் கொடூரமான வகையில் கொரோன 2-வது அலை பரவி வருகிறது. இந்த 2-வது கொரோன அலையை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும், பரவல் சங்கிலியை உடைக்கவும் சில வாரங்களுக்கு முடக்குதல் நிலையை அறிவிப்பது அவசியமானது.


உடனடியாக ஆக்சிஜன் வழங்குதல் , மருந்துகள், தடுப்பூசிகள், பிபிஇ பாதுகாப்பு ஆடைகளை அதிகமாக வழங்குதல் வேண்டும். அனைவரையும் ஒன்றிணைத்து இந்தியா இந்த நேரத்தில் கரோனா சிக்கலைக் கையாள வேண்டும்.


அதே நேரத்தில் கொரோனா வைரஸை வென்றுவிட்டோம் என்று அறிவிப்பதெல்லாம் முதிர்ச்சியற்றது. இந்தியா இப்போது செய்ய வேண்டியது, உடனடியாக சில வாரங்களுக்கு முடக்குதல் நிலையை அறிவித்து கொரோன பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். இதுதான் இப்போது முக்கியமானது என நினைக்கிறேன்.


சீனாவில் பரவிய நேரத்தில் அதாவது கடந்த ஆண்டில், அதைச் சமாளிக்க முழுமையான முடக்குதல் நிலையை சீனா அறிவித்தது. அதுபோன்று இந்தியாவும் அறிவிக்க வேண்டும்.இந்தியாவில் முடக்குதல் நிலையை நீண்ட காலத்துக்கு அதாவது 6 மாதங்கள் வரை அல்ல. தற்காலிகமாக 2-வது அலையின் பரவல் சங்கிலியை உடைக்கவும், பரவலைத் தடுக்கவும் அவசியமானது. முடக்குதல் நிலையை அறிவித்து மக்கள் நடமாட்டத்தைக் குறைத்தாலே, பரவல் குறைந்துவிடும்.


நீண்ட காலத்துக்கான முடக்குதல் நிலையை யாரும் விரும்புவதில்லை. இருப்பினும் சில வாரங்களுக்கு நாம் முடக்குதல் நடவடிக்கை எடுப்பது கொரோன பரவலில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

சாலைகளில் சிலர் தங்கள் சகோதரிகளையும், பெற்றோரையும் படுக்கையில் கிடத்தி ஆக்சிஜனுக்காக அலைமோதுவதைப் பார்த்தேன். அதுபோன்ற செய்திகளையும் கேட்டேன். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் முடக்குதல் நடவடிக்கை எந்த அளவு முக்கியமானதோ அதேபோன்று தடுப்பூசியும் அவசியம். இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் வேகம் போதாது. தற்போதுவரை 140 கோடி மக்களில் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முழுமையாகத் தடுப்பூசி செலுத்த நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும்''.

இவ்வாறு அந்தோனி ஃபாஸி தெரிவித்தார்.

12 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: