ஐதராபாத் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி.

14-வது ஐபிஎல்.

14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 6-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர்.


இதில் தேவ்தத் படிக்கல் 3வது ஓவரில் 11 ஓட்டங்களுடன் வெளியேறினார். விராட் கோலி 4 பவுண்டரிக 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜேசன் ஹோல்டர் வீசிய பந்தில் பிடி கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஷபாஸ் அகமது(14), டி வில்லியர்ஸ்(1), வாஷிங்டன் சுந்தர்(8) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் மேக்ஸ்வெல் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களை பெற்று அரைசதத்தை கடந்தார். ஜேசன் ஹோல்டர் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் மேக்ஸ்வெல்(59) பிடியில் ஆட்டமிழந்தார். இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது.


இதையடுத்து 150 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக சஹா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். 9 பந்துகளை சந்தித்து 1 ஓட்ட மட்டுமே எடுத்திருந்த சஹா சிராஜ் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த மனீஷ் பாண்டே கேப்டன் டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் அரைசதம் கடந்தார்.

37 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 54 ஓட்டங்கள் எடுத்திருந்த டேவிட் வார்னர் பெங்களூரு வீரர் ஜேமிசன் பந்துவீச்சில் வெளியேறினார்.

அடுத்துவந்த ஜானி பிரிஸ்டோ 12 ஓட்டங்களில் வெளியேறினார். 39 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்திருந்த மனீஷ் பாண்டே, ஷபாஸ் அகமது பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த வீரர்கள் அனைவரும் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் ஐதராபாத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், ஐதராபாத் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றது.

பெங்களூரு அணியின் ஷபாஸ் அகமது அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய பெங்களூரு அணியின் வீரர் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

52 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: