ஒரு அரங்கப் பயிற்சி தருகின்ற உற்சாகம் போல் வேறெதுவும் தந்துவிடாது - ஊடகர் M.N.M.அனஸ் -

(IBC இணையச் செய்திகளுக்காக பிரித்தானிய நிரூபர்)


ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு விதமான உற்சாகத்தை பெற வேண்டிய நிலையிலேயே எங்கள் சமுகம் இருக்கின்றது. பெரியவர்கள் அதிகமாக நிறைந்த உளச்சிக்கலுடன் இங்கு வாழ்கிறார்கள். மெய்வெளியின் இந்த அரங்கப் பயிற்சிகள் சிறுவர்களுக்கு மாத்திரமல்லாது பெரியவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் மனஅழுத்தம், உடல் நோய்கள், பதட்டம் போன்றவற்றில் இருந்து படிப்படியாக விடுபட அரங்கப் பயிற்சிகளே மனிதனை வழிகாட்டவல்லது. நல்ல உற்சாகமான ஒரு சமுகத்தை எப்படி உருவாக்கலாம் என்பதற்கான பதிலை அரங்கும் மெய்வெளி பயிலகமும் நிச்சயம் வழங்கும் என நான் நம்புகிறேன் என பிரபல ஊடகரான முகமட் அனஸ் தெரிவித்தார்.

கடந்த வாரம், லண்டன் கெய்ஸ் அப்பகுதியில், ஊடகரும் பிரபல பேச்சாளரும், நாடகருமான சாம் பிரதீபன் அவர்களின் நாடகப்பட்டறையான மெய்வெளியின் அங்குரார்பண நிகழ்வு நடைபெற்றது. இதில் ஊடகவியாளர்களும், பொதுமக்களும் என பலர் கலந்து கொண்டது குறிப்பிட்டதக்கது.

இது குறித்து இயக்குனர், சாம் பிரதீபன் தெரிவிக்கையில், தமிழ்ப் பாரம்பரியக் கலை வடிவங்களான நாட்டுக்கூத்து, இசை நாடகம் போன்றவற்றோடு நவீன நாடகங்கள், இயற்பண்புசார் ஜதார்த்த நாடக வடிவங்கள், வார்த்தைகளற்ற நாடகங்கள், சிறுவர் நாடகங்கள் என இந்த பயிலகத்தின் செயற்பாடுகள் நீண்டு செல்கின்றன. அத்தோடு அரங்கினை வெறும் மகிழ்வளிப்புகளுக்காக என்று மட்டுமல்லாது பல்வேறு சமுக தேவைகளுக்கும் பயன்படுத்தும் பிரயோக அரங்க செயற்பாடுகளையும் மெய்வெளி மேற்கொண்டு வருகின்றது. ஒடுக்கப்பட்டவர்களுக்கான கலந்துரையாடல் அரங்கு, படிம அரங்கு, என பல அரங்கியல் நுட்பங்களினூடாக ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக அரங்கைப்பிரயோகிப்பதிலும் முழு வீச்சான செயற்பாடுகளைப் புரியும் எதிர்கால திட்டங்களையும் மெய்வெளி கொண்டுள்ளது.பிரயோக அரங்க செயற்பாடுகளை சமுகத்தின் பல மட்ட தேவைகளுக்கும் பயன்படுத்துவதில் தேர்ச்சிபெற்ற பல வள ஆளுனர்களை தமது பயிற்சி நெறிகளுக்கு பயன்படுத்தவும் இப் பயிலகம் முனைப்புடன் செய்ற்பட இருப்பதாக தெரிய வருகிறது. தமிழ்ப் பாடசாலை மட்டங்களில் இந்த பிரயோக அரங்க செயற்பாடுகள் பல சாத்தியங்களை ஏற்படுத்தித் தந்திருக்கின்றது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற வழமையான பாடத்திட்ட அலகுகளுக்கு அப்பால் அரங்க செயற்திட்டங்களின் ஊடாக தமிழ் மொழி ஆற்றலை மாணவர்கள் பெற்றுக்கொள்ள எமது தமிழ் மொழிவள நாடக​பயிற்சிப் பட்டறை ( TAMIL SPEECH & DRAMA) முறைமைகள் உதவியளிக்கின்றன.இந்த பயிற்சிப் பட்டறைகள் நாடக அரங்கியல் துறையின் பல்வேறு தேவைகளுக்கும், பல வயது நிலையினருக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. நாடகத்தின் பல மூலக்கூறுகளிலும் ஆர்வமுடையவர்கள் தத்தமது ஆர்வங்களைப் பூர்த்தி செய்து குறித்த துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற எமது இந்த பயிற்சிகள் உதவியளிக்கின்றன. நடிப்பு, உணர்வு வெளிப்பாடு, குரப் பாவனை, முகபாவனை, சொல்லாட்சி வெளிப்பாடு, தாளப் பிரயோகம், மேடைஆளுமை, பிரதியாக்கம், நெறியாள்கை, ஒப்பனை, வேடஉடை, ஆடல், பாடல், இசை, ஒளியமைப்பு, மேடையமைப்பு, மேடை நிர்வாகம்போன்ற சகல அரங்க மூலக்கூறுகளுக்குமான பயிற்சிகள் இவர்களது பட்டறைகளில் வழங்கப்படுகின்றன.
16 views0 comments
  • White Instagram Icon

Contact Us

Address

© Copyright  by Meiveli Drama School.

Tel: +44 7779039372

Email: meivelidrama@gmail.com

Yeading Lane, Hayes, UB4 9LE