கத்தோலிக்கப் பெண்ணின் உடல் ஓட்டமாவடியில் நல்லடக்கம்.

ஜா-எலையைச் சேர்ந்த 60 வயதான கத்தோலிக்க பெண் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பயனின்றி மார்ச் 08ஆம் திகதி மரணமடைந்தார்.
இந்த நிலையில் அவரின் உடல் சனிக்கிழமை (13) ஓட்டமாவடியில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுவரும் சூடுபத்தினசேனை பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது
பல்வேறு பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளின் சவச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்த 45 கொரோனா பூதவுடல்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, கொவிட்-19 னால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இன, மத பேதமின்றி அனுமதி வழங்கப்படுமென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
4 views