நேற்றைய தினம் 1111 கொரோனா தொற்றாளர்கள் பதிவு.


இன்று (28) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,111 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந் 200 பேர், கம்பஹா மாவட்டத்தில் 198 பேர், குருநாகல் மாவட்டத்தில் 119 பேர், காலி மாவட்டத்தில் 86 பேர், கண்டி மாவட்டத்தில் 74 பேர் , களுத்துறை மாவட்டத்தில் 70 பேர் ,நுவரெலியா மாவட்டத்தில் 55 பேர் , பொலன்னறுவை மாவட்டத்தில் 41 , மாத்தறை மாவட்டத்தில் 38 பேர் , மொனராகலை மாவட்டத்தில் 37 பேர் , மாத்தளை மாவட்டத்தில் 32 பேர் , திருகோணமலை மாவட்டத்தில் 28 பேர் , பதுளை மாவட்டத்தில் 20 பேர் , அம்பாறை மாவட்டத்தில் 17 பேர்,இரத்தினபுரி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் தலா 15 பேரும்,

மேலும் கேகாலையில் 14 பேர், யாழ்ப்பாணத்தில் 9 பேர் , அனுராதபுரத்தில் 7 பேர் , வவுனியாவில் 3 பேர் , புத்தளம் மற்றும் மட்டக்களப்பில் தலா 8 பேர் , மன்னார் மற்றும் முல்லைத்தீவில் தலா ஒருவர் என்ற ரீதியில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .


அத்துடன் குறித்த தொற்றாளர்களில் 15 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர் என கொவிட் -19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.



19 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: