வௌிநாட்டில் கொரோனா ஊசி ஏற்றியவர்களை வீட்டில் தனிமைப்படுத்தப்படுத்த தீர்மானம்.

வௌிநாடுகளில் கொரோனா வைரஸ் தடுப்புசியை பெற்று இலங்கைக்கு வரும் இலங்கையர்களை, அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.வௌிநாடுகளில் கொரோனா வைரஸ் தடுப்புசியை பெற்றுக்கொண்டு நாட்டுக்கு வரும் இலங்கையர்கள் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் விடுவிக்கப்பட வேண்டுமென தான் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரினேன். இதற்கு அவர் இது தொடர்பில் கலந்துரையாடியப் பின்னர் இது குறித்தான தீர்மானம் அறிவிக்கப்படுமென பதில அளித்ததாகவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
0 views