15 பில்லியன் சீனி மோசடி- விசாரணைகள் ஆரம்பம்.


சீனி இறக்குமதியின்போது 15.9 பில்லியன் ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியினால் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில்


இது தொடர்பாக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி, விசாரணைகளுக்காக குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, இந்த விடயம் தொடர்பில் விசேட கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதற்காக திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றை ஈடுபடுத்தியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆடிகல கருத்து தெரிவிக்கையில் எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல, நாட்டில் சீனி கொள்ளையொன்று இடம்பெறவில்லை எனவும் வரி குறைக்குப்படும்போது வருமானம் இழக்கப்படுமெனவும் தெரிவித்தார்.


மேலும் தெரிவித்துள்ள அவர், சீனி வரியால் நாட்டுக்கு 15.9 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்தாக நிதி அமைச்சு தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன. எனினும் நிதி அமைச்சு அவ்வாறான கருத்துகளைத் தெரிவிக்கவில்லை என்றார்.அரசாங்கத்துக்கு வரியைக் குறைக்கும் அதிகாரம் காணப்படுவதாகவும், வரியைக் குறைக்கும்போதும் வருமானம் இழக்கப்படுமெனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.


16 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli