மாமனிதர் தராகி சிவராமின் 16வது ஆண்டு நினைவு நாள் இன்று நினைவுகூரப்பட்டது.


2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் 16வது ஆண்டு நினைவு நாள் வவுனியாவில் இன்று நினைவு கூரப்பட்டது.வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றது.

அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில்இ அன்னாரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.சிவராம் தொடர்பான நினைவுரையினை மூத்த ஊடகவியலாளர் ந.கபிலநாத் நிகழ்த்தியிருந்தார்.நிகழ்வில் வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


பிரபல ஊடகவியலாளர் தராகி சிவராம் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி வெள்ளை வேனில் கடத்தப்பட்டு, 29ம் திகதி இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தராகி சிவராமின் ஊடகம் மற்றும் தமிழ் தேசியத்திற்கான பணிகளுக்கு மதிப்பளித்து தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் மாமனிதர் விருது வழங்கி கௌரவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

1 view
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: