மியன்மாரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு – 18 பேர்பலி .

கடந்த நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து, மியன்மாரின் ஆட்சியதிகாரத்தைக் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவம் கைப்பற்றியது.அதைத் தொடர்ந்து, இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் இட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த போராட்டத்தின்போது யங்கூன், தாவெய், மாண்டலே உள்ளிட்ட நகரங்களில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 18 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை இராணுவம் தடுப்புக்காவலில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.