மகாராஷ்டிர மாநில அரசு மருத்துவமனையில் ஒக்சீஜன்வாயுக் கசிவு, 22 நோயாளிகள் மரணம்


மகாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரில் உள்ள அரசு மருத்துவ மனையில் ஒக்சீஜன் கொண்டு வந்த டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, கசிவை அடைக்க ஒக்சீஜன் விநியோகம் நிறுத்தப்பட்ட தால், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்கள் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


நாசிக் நகரில் ஜாகீர் ஹுசைன் நகராட்சி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஒக்சீஜன் விநி​யோகம் செய்வதற்காக ஒக்சீஜன் டேங்கர் ​லொறி இன்று வந்தது. மருத்துவனையில் உள்ள ஒக்சீஜன் டேங்கருக்கு, லாரியிலிருந்து ஒக்சீஜனை மாற்றும்போது திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக ஒக்சீஜன் விநியோகம் துண்டிக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனையில் ஐசியூ வார்டில் ​கொரோனா தொற்றாளர்கள் பலர் ஒக்சீஜன் சிகிச்சையுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். திடீரென ஒக்சீஜன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, 22 நோயாளிகள் உயிரிழந்தனர்.






39 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: