5G ஐ விட 100 மடங்கு வேகமாக செயற்படக்கூடிய உலகின் முதல் 6G செயற்கைக்கோளை சீனா அனுப்பி வைத்துள்ளது!
படங்கள்/வீடியோ இணைப்பு

5G ஐ விட 100 மடங்கு வேகமாக செயற்படக்கூடிய தொழில்நுட்பத்தை பரிசோதிக்க, உலகின் முதல் 6G செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் சீனா செலுத்தியுள்ளதாக சீனாவின் அரசுக்கு சொந்தமான ஊடகமான CGDN தெரிவித்துள்ளது.

அண்மையில், சீன அரசு , விண்வெளியில் 'ஸ்டார் எரா -12' என்ற செயற்கைக்கோளை ஆரவாரம் இன்றி விண்வெளியியல் பரிசோதனைக்காக ஏவியிருந்த செய்தி வெளிவந்திருந்தது.
தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (N.S.F) தியாகராஜன் நந்தகோபால் கருத்துப்படி, பூமியில் காற்றை வெளிப்படுத்தும்போது அதிக அதிர்வெண் அலைகள் மறைந்து போக வாய்ப்புள்ளது என்பதால் 6G தொழில்நுட்பத்தினூடாக விண்வெளியில் அலைகளை சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கின்றார்.

5G யை விட 100 மடங்கு வேகமாக செயற்படக்கூடயது என நம்பப்படும் 6G க்கு உயர் வரையறை திரைப்படங்களை வெறும் 8 வினாடிகளில் பதிவிறக்க முடியும் என்றும். அதியுச்ச துல்லிய நிழற்படங்களை ஒரு நிமிடத்திற்குள் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் கூறப்படுகின்றது. இந்த வேகமானது மற்ற தொழில்நுட்பங்களை, குறிப்பாக மருத்துவத்தை பெரிதும் மேம்படுத்த வாய்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
