சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதற்கான அவசியம் இல்லை-பிரதமர்.

சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதற்கான அவசியம் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அவர் இவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாத நிலையில் சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிக்க வேண்டிய தேவை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அலரிமாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றிருந்த கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயத்தினைக் தெரிவித்துள்ளார்.
0 views