ஆஸ்திரியா பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: இரண்டு மசூதிகளை மூட அரசாங்கம் உத்தரவு!


வியன்னாவில் தாக்குதல் நடத்திய ஜிஹாதி துப்பாக்கிதாரி அடிக்கடி சென்றுவந்த இரண்டு மசூதிகளை மூட ஆஸ்திரிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து ஆஸ்திரியா நல்லிணக்க சூசேன் ராப் கூறுகையில், 'திங்களன்று தாக்குதல் நடத்தியவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தாக்குதல் நடத்திய ஜிகாதி ஒருவர்இரண்டு வியன்னா மசூதிகளுக்கு பலமுறை விஜயம் செய்ததாக உட்துறைஅமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு மசூதிகள் வியன்னாவின் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ளன, ஒன்றுஒட்டாக்ரிங் மாவட்டத்தில் மெலிட் இப்ராஹிம் மசூதி என்றும் மற்றொன்று மீட்லிங் பகுதியில் உள்ள தெவ்ஹிட் மசூதி என்றும் அழைக்கப்படுகிறது. உள்நாட்டு புலனாய்வு அமைப்பு 'இந்த மசூதிகளுக்கு வருகை தாக்குதல் நடத்தியவரின்தீவிரவாத எண்ணங்களை அதிகரித்ததாக தங்களிடம் கூறியது என்று அவர் தெரிவித்தார். மசூதிகளில் ஒன்று மட்டுமே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது' என கூறினார்.

ஆஸ்திரியாவின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய மத சமூகத்தின் அறிக்கையில் 'மதக் கோட்பாடு மற்றும் அதன் அரசியலமைப்பு' பற்றிய விதிகளையும்,

இஸ்லாமிய நிறுவனங்களை நிர்வகிக்கும் தேசிய சட்டங்களையும் மீறியதால் அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட ஒரு மசூதி மூடப்படுவதாகக் கூறியுள்ளது.ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் சமீபத்தில் துப்பாக்கி ஏந்திய ஜிகாதிகள் நடத்திய தாக்குதலில் 4பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதலை நடத்தியது 20 வயதான குஜ்திம் ஃபெஜ்ஸுலை என அடையாளம் காணப்பட்டு அவர் பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டார். தாக்குதலுக்குப் பின்னர்காவலில் வைக்கப்பட்டுள்ள 16பேரில் 6பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


12 views0 comments
  • White Instagram Icon

Contact Us

Address

© Copyright  by Meiveli Drama School.

Tel: +44 7779039372

Email: meivelidrama@gmail.com

Yeading Lane, Hayes, UB4 9LE