பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

14-வது ஐ.பி.எல்..


14-வது ஐ.பி.எல். தொடரின் 17-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் நாணய சுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, டி காக் ஆகியோர் களம் இறங்கினர். டி காக் 3 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார்.

இஷான் கிஷன் 17 பந்தில் 6 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அப்போது மும்பை அணி 7 ஓவரில் 26 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது. 3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சூர்யகுமார் யாதவ் 27 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 16.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

மறுமுனையில் 40 பந்தில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, 52 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 63 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 1 ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தார். கடைசி நான்கு ஓவர்களில் 26 ஓட்டங்கள் மட்டுமே சேர்க்க, இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்கள்களே எடுத்தது. இதையடுத்து பஞ்சாப் அணிக்கு 132 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். இந்த ஜோடி தொடக்கத்தில் இருந்தே நிதானமான அட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த நிலையில் 8-வது ஓவரில் ராகுல் சாஹர் வீசிய பந்தில் மயங்க் அகர்வால் 25 ஓட்டங்களில் பிடி கொடுத்து வெளியேறினார்.

அடுத்த விக்கெட்டுக்கு களமிறங்கிய கிறிஸ் கெய்ல் உடன் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சீரான இடைவெளியில் பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பறக்கவிட்டு ஆட்டத்தை தங்கள் வசப்படுத்தினர். இறுதியாக 17.4 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 132 ஓட்டங்கள் சேர்த்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 52 பந்துகளில் 60 ஓட்டங்கள்களும், கிறிஸ் கெய்ல் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 43 ஓட்டங்கள்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

18 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: