ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி.


14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று நிறைவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

ரசிகர்கள் இன்றி சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது.


நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், கிறிஸ் லின்னும் களம் புகுந்தனர். முதல் 2 ஓவர்கள் நிதானம் காட்டிய இவர்கள் ரன்வேகத்தை துரிதப்படுத்திய சமயத்தில் ரோகித் சர்மா (19 ஓட்டங்கள் , 15 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்-அவுட் ஆனார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (31 ஓட்டங்கள், 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), இஷான் கிஷன் (28ஓட்டங்கள் ) கணிசமான பங்களிப்பை அளித்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 49 ஓட்டங்கள் (35 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) வாஷிங்டன் சுழலில் அவரிடமே சிக்கினார். ஹர்திக் பாண்ட்யா 13 ஓட்டங்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 159 ஓட்டங்கள் எடுத்தனர்.


அடுத்து 160 ஓட்ட இலக்கை நோக்கி பெங்களூரு அணி ஆடியது. ஆச்சரியம் கேப்டன் விராட் கோலியுடன், வாஷிங்டன் சுந்தர் தொடக்க ஆட்டக்காரராக இறங்கும் வாய்ப்பு பெற்றார். 2-வது பந்திலேயே ஸ்லிப்பில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த சுந்தர் 10 ஓட்டங்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து இறங்கிய ரஜத் படிதர் (8ஓட்டங்களில் ) போல்டு ஆனார்.


இதைத் தொடர்ந்து விராட் கோலியும், கிளைன் மேக்ஸ்வெல்லும் ஜோடி சேர்ந்து ஸ்கோரை சீராக உயர்த்தினர். ஸ்கோர் 98 ஓட்டங்களை எட்டிய போது (12.3 ஓவர்) விராட் கோலி (33 ஓட்டங்கள், 29 பந்து, 4 பவுண்டரி) பும்ராவின் பந்து வீச்சில் எல்.டபிள்யூ. ஆனார். சிறிது நேரத்தில் மேஸ்வெல்லும் (39 ஓட்டங்கள், 28 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார்.

இதன் பின்னர் டிவில்லியர்ஸ் அதிரடி காட்டி அணியை நிமிர வைத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை இளம் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜேன்சன் வீசினார். இதில் முதல் 3 பந்தில் 4 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது. 4-வது பந்தில் 2-வது ஓட்டங்களுக்கு ஓடிய போது டிவில்லியர்ஸ் (48 ஓட்டங்கள் , 27 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்-அவுட் ஆக, இதையடுத்து 2 பந்தில் 2 ஓட்டங்கள் தேவையானது. 5-வது பந்தில் ஒரு ஓட்டங்கள் வந்தது. தொடர்ந்து 6-வது பந்தில் ஹர்ஷல் பட்டேல் ஒரு ஓட்டங்கள் எடுக்க பெங்களூரு அணி ‘திரில்’ வெற்றியை பெற்றது. பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 160 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


32 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: