7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி.

ஐ.பி.எல். கிரிக்கெட்.

14-வது ஐ.பி.எல். போட்டியின் 2-வது நாளான நேற்று (சனிக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணய சுழற்ச்சியில் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட், முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தடியாது துவக்க ஆட்டக்காரர்களாக டு பிளசிஸும் ருதுராஜ் கெய்க்வாட்டும் களம் இறங்கினர். சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளசிஸ் ஓட்டம் எதுவும் இன்றி எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த ஓவரில் ருதுராஜும் 5 ஓட்டங்களில் வெளியேறினார். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ஓட்டங்களுக்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.

3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மோயின் அலி- சுரேஷ் ரெய்னா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 24 பந்துகளில் 36 ஓட்டங்கள் அடித்த மோயின் அலி, அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அம்பத்தி ராயுடு (23 ஓட்டங்கள் ) ஓரளவு தாக்குப்பிடித்தார். எனினும் மறுமுனையில் சுரேஷ் ரெய்னா அசத்தலாக ஆடினார். ஏதுவான பந்துகளை சிக்சருக்கு விளாசி அசத்தினார். சிறப்பாக ஆடிய சுரேஷ் ரெய்னா 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உள்பட 54 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டோனி ஓட்டம் எதுவும் இன்றி போல்டு ஆகி வெளியேறினார். கடைசி கட்ட ஓவர்களில் சாம் கரன் மற்றும் ஜடேஜா அதிரடி காட்டினர். குறிப்பாக சாம் கரன் டெல்லி அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். இதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்கள் சேர்த்தது. ஜடேஜா 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சாம் கரன் 15 பந்துகளில் 34 ஓட்டங்கள் விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, 189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில், ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். அதிரடியில் கலக்கிய இந்த ஜோடியில் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதனைத்தொடர்ந்து இந்த ஜோடியில் பிரித்வி ஷா 72 (38) ஓட்டங்கள்களும், ஷிகர் தவான் 85 (54) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஸ்டோய்னிஸ் 14 (9) ஓட்டங்கள் வெளியேறினார்.


இறுதியில் கேப்டன் ரிஷாப் பண்ட் 15 (12) ஓட்டங்களும் , ஹெட்மயர் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.4 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டம் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், ப்ராவோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.

19 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: