3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி.

ஐ.பி.எல். கிரிக்கெட்.


14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், இன்றைய 7-வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இன்றைய ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.


நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் டெல்லி கேபிடல்ஸ் அணி துடுப்பெடுத்தாடியது.தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வீ ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.

2வது ஓவரில் ப்ரித்வீ ஷா 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, ஷிகர் தவான் 9 ஓட்டங்கள் 4வது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே 8 ஓட்டங்கள் எடுத்த நிலையில், போல்ட் ஆனார். ராஜஸ்தான் பந்துவீச்சாளர் உனத்கட் பந்துவீச்சில் டெல்லியின் 3 தொடக்க விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் அணி சற்று தடுமாறிய நிலையில் ரிஷப் பண்ட் நிதானமாக ஆடினார்.

மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஓட்டங்கள் ஏதுமின்றி பிடி கொடுத்து வெளியேறிய நிலையில், லலித் யாதவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் 9 பவுண்டரிகளை பறக்கவிட்டு 51 ஓட்டங்களை சேர்த்தார். இது தவிர டெல்லி அணியில் அதிகபட்சமாக லலித் யாதவ் 20 ஓட்டங்கள், டாம் கர்ரன் 21 ஓட்டங்கள்களும் எடுத்து ஆட்டமிழந்தார் . இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் உனத்கட் 3 விக்கெட்டுகளும், முஸ்தாபிஜுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும், கிறிஸ் மாரிஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் சார்பில் ஜோஸ் பட்லர் மற்றும் மனன் வோக்ரா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் மனன் வோக்ரா 9(11) ஓட்டங்கள்லும், அவரைத்தொடர்ந்து ஜோஸ் பட்லர் 2 (7) ஓட்டங்கள் லும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 4 (3) ஓட்டங்கள்லும், சிவம் துபே 2 (7) , ரியான் பராக் 2 (5) ஓட்டங்களும் , ராகுல் திவாடியா 19(17) ஓட்டங்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனிடையே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 62 (43) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கிறிஸ் மோரிஸ் மற்றும் ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி, அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்றது.

இறுதியில் கிறிஸ் மோரிஸ் 36 (18) ஓட்டங்களும் , ஜெய்தேவ் உனத்கட் 11 (7) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ராஜஸ்தான் அணி 19.4 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக அவிஷ் கான் 3 விக்கெட்டுகளும், வோக்ஸ் மற்றும் ரபடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது.


46 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: