ராஜஸ்தானை சாய்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது வெற்றியை பதிவு செய்தது.

14-வது ஐ.பி.எல்.


14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதியது . நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதன்படி ருதுராஜ் கெய்க்வாட்டும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பவுண்டரியுடன் ரன் கணக்கை ஆரம்பித்த சென்னை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. ருதுராஜ் 10 ஓட்டங்களில் வெளியேறினார். ஜெய்தேவ் உனட்கட்டின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார்கள். பிளிஸ்சிஸ் 33 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மொயீன் அலி ஓட்டங்களிலும், சுரேஷ் ரெய்னா 18 ஓட்டங்களிலும் ரன், அம்பத்தி ராயுடு 27 ஓட்டங்களிலும் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.


கேப்டன் டோனியின் தடுமாற்றம் இந்த ஆட்டத்திலும் எதிரொலித்தது. 17 பந்தில் 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இளம் வேகப்பந்து வீச்சாளர் சகாரியாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இறுதிகட்டத்தில் வெய்ன் பிராவோவின் அதிரடியால் ஸ்கோர் 180-ஐ கடந்தது.

20 ஓவர் முடிவில் சென்னை அணி 9 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்கள் குவித்தது. பிராவோ 20 ஓட்டங்களிலும் களத்தில் இருந்தார். ராஜஸ்தான் தரப்பில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சகாரியா 3 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.


அடுத்து 189 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் நிலைத்து நின்று ஆட இன்னொரு பக்கம் சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவர்களின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. மனன் வோரா 14 ஓட்டங்களிலும் , கேப்டன் சஞ்சு சாம்சன் 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். அபாயகரமான ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் (49 ஓட்டங்களிலும் ரன், 5 பவுண்டரி, 2 சிக்சர்), டேவிட் மில்லர் 2ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்களில் ராஜஸ்தானால் 9 விக்கெட்டுக்கு 143 ஓட்டங்கள் எடுக்க முடிந்தது. இதன் மூலம் சென்னை அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றுக்கொண்டது . மொயீன் அலி 3 விக்கெட்டுகளும், சாம் கர்ரன், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். சென்னை அணிக்காக டோனி கேப்டனாக ஆடிய 200-வது ஆட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

11 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: