வடக்கில் நடந்த பேரணி குறித்து கொழும்பு ஊடகங்கள் கவனம் செலுத்தாமை ஏன்:அமெரிக்கா கேள்வி!


பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து கொழும்பை தளமாகக்கொண்ட ஊடகங்கள் கவனம் செலுத்தாமை ஏன் என இலங்கைக்கான அமெரிக்கதூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த விடயம் குறித்து தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், 'அமைதிவழிப் போராட்டம் என்பது அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒன்றாகும். இவ்வாறான அமைதிவழிப் போராட்டங்களுக்கு செவிசாய்க்க வேண்டும், அவர்களின் கவலைகள்குறித்து அவதானம் செலுத்த வேண்டும், என சுட்டிக்காட்டியுள்ளார்.பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த போதிலும், கொழும்பைத் தளமாகக் கொண்டஊடகங்கள் இது குறித்து ஏன் கவனம் செலுத்தவில்லை?' என பதிவிட்டுள்ளார்.

7 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli