- smithjayanth6
போராட்டத்தில் பங்கேற்றவர்களைத் தண்டிப்பதை விடுத்து மக்களின் தேவையைப் புரிந்து கொள்ளுங்கள்- சாணக்கியன

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தினை முன்னெடுத்தமை தொடர்பாக பொலிஸ் நிலையங்கள் ஊடாக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வாக்குமூலங்கள் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்தில் பங்கேற்றவர்களைத் தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்னவென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் , அத்துடன், ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லும் நடவடிக்கையானது இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லையென்பதை உறுதிப்படுத்தும் செயற்பாடாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வடகிழக்கில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களில் இருந்துவந்த பொலிஸ் உத்தியோகத்தகர்களினால் இரா.சாணக்கியனிடம் வாக்குமூலம் பெறப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது .