அறப்போராட்டம் நடத்திய அம்பிகையின் உண்ணாவிரதத்தை முடிக்குமாறு ஏகோபித்த கோரிக்கை!


இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்த அகிம்சைவழி உண்ணாவிரதப்போராட்டம் இன்று மடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றபட்டுள்ள நிலையில் பிரித்தானியாவில் நேற்று கிளர்ந்தெழுந்த புலம்பெயர் தமிழர்களின் வேண்டுதலாகவும் உலகெமெங்குமுள்ள ஒட்டுமொத்த தமிழினத்தினதும் அமைப்புக்கள் கட்சிகளினதும் வேண்டு கோளையும் ஏற்று அம்பிகையின் உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசிடம் 4 அம்சக்கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடுவேன் என இன்றுடன் 17 நாட்கள் பசித்திருந்த அம்பிகை கோரிக்கைகளில் ஒன்று முழுமையாவும் இன்னொன்று அண்ணளவாகவும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே வெற்றியுடன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாலும்இ பாராளுமன்ற உறுப்பினர்களாலும் அனைத்து தமிழ் மக்களாலும் கேட்கப்பட்டுள்ளார். அம்பிகை முன்வைத்த அனைத்துலக சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்குதல், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரித்தல், சிறிலங்காவுக்கான தனியான அறிக்கையாளரை நியமித்தல் மற்றும் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் கருத்து கணிப்பு வாக்கெடுப்புக்கான ஐ.நா வின் பரிந்துரைத்தல் ஆகிய நான்கு அம்சக்கோரிக்கைகளில் பிரித்தானியாவின் ஐ.நா.வுக்கான இறுதி வரைபில் ஒரு புதிய விதமான அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது.


அத்துடன் நிரந்த ஐநா கண்காணிப்பளருக்கு பதிலாக, தொடர்ச்சியாண கண்காணிப்பு நடைமுறை ஓன்றும் உருவாக்கப்படவுள்ளது. இந்நிலையிலேயேஇ திருமதி அம்பிகை செல்வக்குமார் மாபெரும் வெற்றியுடன் இன்று பிரித்தானிய நேரம் பி.ப. 5.00 மணியளவில் தனது உண்ணாவிரதத்தை, மத தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் முடித்துகொண்டுள்ளார். இது நீண்டதொரு தமிழின போராட்ட வரலாற்றி அகிம்சைவழி மாபெரும் வெற்றி என்றும் அம்பிகையின் கோரிக்கையை நிறைவேற்றி அவரை காப்பாற்றுமாறு நேற்று பிரித்தானியாவில் மாபெரும் பேரணியை நிகழ்த்திய புலம்பெயர் தமிழர்களுக்கும் உலகெங்கும் அவருக்காக குரல் கொடுத்த தமிழினத்தின் ஒற்றுமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

26 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli