வெள்ளவத்தையில் போதைப்பொருள் விருந்துபசாரம் நடத்திய சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியை கைது.


வெள்ளவத்தை பிரதேசத்தில் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு போதைப்பொருள் விருந்துபசாரம் ஒன்றை நடத்திய சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியை உட்பட 15 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யபட்டவர்களில் அவரது 02 பிள்ளைகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடமிருந்து ஐஸ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் போன்றன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆசிரியை 42 வயதானவர் என்பதுடன், ஏனையவர்கள் 18-20 வயதுக்குட்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

292 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: