சக கடற்கலங்கள் ஹோர்ண் ஒலிக்கபயணத்தைத் தொடங்கியது கப்பல்!

சூயஸ் கால்வாய்த் தடை நீங்கியது

பாரிய கப்பல் ஒன்று தரைதட்டியதால் கடந்த ஆறு நாட்களாகத் தடைப்பட்டிருந்த சூயஸ் கால்வாய் ஊடான சர்வதேச கப்பல் போக்குவரத்துகள் இன்று பகல் மீளத் தொடங்கி உள்ளன.


காலவாய்க்குக் குறுக்கே சிக்குண்டு நின்ற "எவர் கிவ்வின்" (Ever Given) கப்பலில் இருந்து பல்லாயிரக்கணக் கான தொன் எடை கொண்ட கொள் கலன்கள் இறக்கப்பட்டு கப்பலின் சுமை குறைக்கப்பட்டதை அடுத்து அது வெற்றி கரமாகத் தனது பயண வழிக்குத் திருப் பப்பட்டுள்ளது.

பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் கப்பல் மீண்டும் பயண வழிக்குத் திருப்பப் பட்டுள்ளது என்ற தகவலை சூயஸ் கால்வாய் அதிகாரசபை சற்றுமுன் அறிவித்துள்ளது. கப்பல் தொடர்ந்து பயணிக்குமா அல்லது பரிசோதனை ளுக்காக அங்குள்ள துறைமுகத்தில் தரித்து நிற்குமா என்பது இன்னும் தெரியவரவில்லை.


கப்பல் மெல்ல நகர்ந்து பயணத்தை தொடங்கியதும் கால்வாயில் தரித்து நின்ற நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஹோர்ண் ஒலி (honking) எழுப்பி ஆரவாரத்தை வெளிப்படுத்தின என்று எகிப்தின் உள்நாட்டுத் தொலைக்காட்சி சேவைகள் தெரிவிக்கின்றன.


சில தினங்களாக உலக பொருளாதார த்தையே ஆட்டங்காணச் செய்த கப்பல் புறப்படும் காட்சிகள் சமூகவலைத்தள ங்களில் வைரலாகி வருகின்றன. கப்பலை நீரில் இறக்கி நகர்த்தும் பாரிய பணியில் ஈடுபட்டிருந்த உள்நாட்டு, வெளிநாட்டு மீட்புப் பணியாளர்களுக்கு எகிப்திய அதிபர் Abdel Fattah al-Sisi தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.


கப்பலில் இருந்து பாரிய கொள்கலன்கள் இறக்கப்பட்ட அதேசமயம் இரு புறங் களிலும் கரைகளில் பெரும் பரப்பளவுக் குத் தரை அகழப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்வாய்குக் குறுக்கே நின்றி ருந்த கப்பலை அதன் பயணத் திசைக்கு நகர்த்த முடிந்துள்ளது.


பயணம் தடைப்பட்டதால் கால்வாயின் இரு பக்கங்களிலும் நானூறுக்கும் மேற்பட்ட கப்பல்கள் வரிசையில் காத்து நிற்கின்றன. தடை நீங்கி இருப்பதால் அவை அடுத்த சில தினங்களில் படிப்படியாகப் பணத்தை தொடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. 400 மீற்றர்கள் நீளமான அந்த பாரிய கொள்கலன் கப்பல் சூயஸ் கால்வாயை குறுக்கே மறித்தவாறு திசை திரும்பி நின்றதால் உலகின் மிக முக்கிய கடல் வழி தடைப்பட்டிருந்தது. சர்வதேச கப்பல் போக்குவரத்து தடைப்பட்டதால் உலகெங்கும் எரிபொருள் விலைகள் உயர்ந்தன. நாளொன்றுக்கு ஆறு முதல் பத்து பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டது.

404 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli