சிகிச்சை பலனின்றி இன்று (17) அதிகாலை 5 மணியளவில் நடிகர் விவேக் காலமானார்.


நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் நேற்று(16) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று (17) அதிகாலை 5 மணியளவில் தனது 59 ஆவது வயதில் காலமானார்.


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்த விவேக் தனது நகைச்சுவை மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார்.

33 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: