ரஞ்சன் ராமநாயக்கவுக்குப் பதிலாக அஜித் மன்னப்பெரும நியமனம்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடத்திற்கு அஜித் மன்னப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஜனவரி 12ஆம் திகதி நீதிமன்றம தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
5 views