புலம்பெயர் தமிழர் அமைப்புகளையும் பல தனிநபர்களையும் இலங்கை அரசு தடை.

சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கைக்கான ஆய்வாளர் அலன் கீனன், விமர்சித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புகளையும் பல தனிநபர்களையும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கைக்கான ஆய்வாளர் அலன் கீனன், விமர்சித்துள்ளார்.


அசாதாரணமான பிற்போக்கு நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை அரசாங்கம் பயங்கரவாதிகள் என அறிவிக்கும் சட்டத்தை பயன்படுத்தி கடந்த மாதம் அரசியல்ரீதியில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற புலம்பெயர் அமைப்புகளை தடை செய்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையில் உள்ள எவரும் அந்த அமைப்புகளுடன் தொடர்புகொள்வதை கூட ஆபத்தானதாக மாற்றியுள்ளது. அரசாங்கத்தின் இந்த பட்டியலில் 300க்கும் அதிகமானவர்களின் பெயர்கள் விபரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த பட்டியலில் ஐம்பது முஸ்லீம்களின் பெயர்கள் காணப்படுவதுடன் இவர்கள் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இலங்கையில் வசிக்கும் 35 தமிழர்களின் பெயர்களும் அடங்கியுள்ளன இவர்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர். இதேசட்டத்தை பயன்படுத்தி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 2014 இல் இதே தமிழ் அமைப்புகளையும் தனிநபர்களையும் தடை செய்திருந்தது.இந்த சட்டவடிக்கை குறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில், ஆய்வாளர் அலன் கீனன், விமர்சித்துள்ளார்.

39 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli