திட்டமிட்டபடி மே தினப் பேரணி நடத்தப்படும்

ஜே.வி.பி அறிவிப்பு

இந்த ஆண்டும் திட்டமிட்டபடி மே தினப் பேரணியை நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அதில் கலந்துகொண்டு பேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க இந்த முடிவை உறுதிப்படுத்தினார். புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், பேரணிகள், ஒன்றுகூடல்கள் எனக் கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பற்றி கவனம் செலுத்தாத அரசு, மே தினப் பேரணிகளை நடத்துவதற்கு தடை விதித்துள்ளமைக்குப் பின்னால் ஒரு அரசியல் நோக்கம் உள்ளது என்பது தெளிவாகின்றது என அவர் சுட்டிகாட்டினார்.





மேலும் தனது அரசியல் நோக்கத்துக்காக அரசு மே தினப் பேரணிகளை நிறுத்தி வைக்க முடிவெடுத்தாலும், அந்த முடிவுக்கு ஜே.வி.பி. கட்டுப்படாது எனவும் அந்த அடிப்படையில், மே தினப் பேரணியை நடத்துவதற்கு ஜே.வி.பி. அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

4 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: