- smithjayanth6
சக்ரா படத்தை வெளியிட தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டிரைடண்டஆர்ட்ஸ் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்களிடம் ஒப்பந்தம் செய்த கதையை விஷாலை வைத்து படமாக்கியுள்ளதாக இயக்குனருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷால், இயக்குனர் ஆனந்தனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த படத்தை அறிமுக இயக்குநர் எம்எஸ் ஆனந்தன் இயக்க, விஷால் தயாரித்து நடித்துள்ளதுடன் ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரெஜினா கெசண்ட்ரா ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.பிப்ரவரி 19 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 view