உலகின் வலிமையான இராணுவமாக சீனா.

உலகின் வலிமையான இராணுவமாக சீனாவின் இராணுவம் உள்ளதாக பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்ரி டைரக்ட் (Military Direct) தெரிவித்துள்ளது.
குறித்த வலைத்தளத்தின் ஆய்வு அறிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் ரஷ்யா மூன்றாவது இடத்திலும் ,இந்தியா நான்காம் இடத்திலும் பிரான்ஸ் ஐந்தாமிடத்திலும் அத்துடன்,பிரித்தானியான ஒன்பதாம் இடத்திலும் உள்ளன.
இராணுவத்துக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு, படை வீரர்களின் எண்ணிக்கை, முப்படைகளின் படைக்கலன்களின் தொகை, அணு வளங்கள், நவீன கருவிகள், படை வீரர்களின் சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில் இராணுவ வலிமைக் குறியீடு கணக்கிடப்பட்டுள்ளதாக ஆய்வு செய்துள்ள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளள்ளது.
குறித்த ஆய்வுகளின் குறியீட்டில் 100 புள்ளிகளில் 82 புள்ளிகளைப் பெற்றுள்ள சீனா உலகின் வலிமையான இராணுவ சக்தியைக் கொண்டுள்ளதாக மிலிட்ரி டைரக்ட் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.