சீன பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை விஜயம்.


சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்றைய தினம் இலங்கைக்கு வருகின்றார்.


இவரது விஜயத்தின் போது, அரசியல் தொடர்புகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது மாத்திரமன்றி இராணுவத் தொடர்புகள் பற்றியும் அவதானம் செலுத்தப்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சிரேஷ்ட அதிகாரி இவர் ஆவார். இவருக்கு முன்னர் கடந்த ஒக்டோபரில் சீனாவின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் யாங் ஜீச்சி நாட்டுக்கு வருகை தந்திருந்தார்.


இலங்கை வரும் சீன பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

4 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: