• smithjayanth6

சிறீலங்கா அரசின் ஆணைக்குழு நீதியைத் தடுப்பதற்கான இன்னுமொரு முயற்சி: ஸ்டீபன் ரப் தெரிவிப்பு.


சிறீலங்கா அரசு, கடந்த காலங்களில் பொறுப்புக்கூறல் தொடர்பாக ஆராய்வதற்காக ஆணைக் குழுவொன்றை நியமித்துள்ளமை நீதியை தடுப்பதற்கான இன்னொரு முயற்சி' என அமெரிக்காவின் யுத்த குற்ற விவகாரங்களிற்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் பேரவை, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான நிலையம், இலங்கையில் நீதி மற்றும் சமாதானத்துக்கான பரப்புரை, கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகியன இணைந்து முன்னெடுத்த இணையவழி கருத்தரங்கில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


உலகத்தின் அனைத்து பகுதியிலும் மனித உரிமைகளை சர்வதேச மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான கடப்பாடு தங்களுக்கு உள்ளது என்றும் ; இதில் பாரிய மனித உரிமை மீறல்களுக்கான உண்மை மற்றும் நீதிக்கான உரிமையும் உள்ளது எனவும் குறிப்பிட்ட அவர் இலங்கையின் ஆணைக்குழுக்களால் நிருபிக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் கூட தண்டனையிலிருந்து விடுபடலாம் என்ற நிலை காணப்பட்டது எனவும் தன்னுடைய கடந்த கால இலங்கை அரசின் மனிதஉரிமை மீறல் செயற்பாடுகளை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக முக்கியமான சம்பவங்கள் குறித்து விசாரணைகள் தடைகளையும் மீறி கடும் முயற்சிகள் இடம்பெற்று பல அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான நடவடிக்கைகள் ஏனைய சம்பவங்களிற்கு நீதியை வழங்கும் நடவடிக்கைகள் தடுக்கப்படுவதை அவதானத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை மக்களின் உண்மை மற்றும் நீதிக்காக போராட வேண்டிய கடப்பாட்டை அனைவரும் பற்றிக்கொள்ளாவிட்டால் உலகம் ஆபத்தினை கொள்ளப் போகின்றது என அவர் தெரிவித்தார்.

0 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli