இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டியது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ உயிரிழந்தார்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,44,178 பேர் வீடு சென்ற நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,29,53,821 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 19,29,329 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 12,38,52,566 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பீகார் மாநிலத்தின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. கல்வித்துறை மந்திரி மிவாலா சௌதிரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிவாலா சௌதிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.எல்.ஏ. மிவாலா சௌதிரி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

4 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: