கொரோனா குழந்தைகள்!


கொரோனா காலத்தில பிறக்கிற குழந்தைகள் மனுஷரை ஏற்று கொள்ளுமா அல்லது பார்த்து பயன்படுமா ?


இன்றைய எனது பதிவில் நான் உங்களோட பகிரும் விடயம் கொரோனாவில் பிறக்கும் குழந்தைகளும் நாமும் .


உண்மையிலே கொரோனா காலத்தில பிறக்கும் குழந்தைகளின் பரிதாப நிலைய எண்ணி நான் கவலைப்படுறன் ஏன் எண்டால் தாய் தகப்பனை சகோதரர்களை தவிர வேறு ஒருத்தரும் உறவாடமுடியாத நிலை ஒரு வேளை பலருக்கு கொரோனா காலத்தில் பிறக்கும் முதல் குழந்தை எண்டால் இன்னும் சோகம் எண்டே கூற வேண்டும் .


என்னிடம் ஒரு குழந்தையின் அம்மம்மா பெரிய கவலையோடு சொன்னா என்ர மகளிண்ட குழந்தையை பாக்கப்போனால் என்ன கண்டவுடனே குழந்தை கத்தி கத்தி அழுகுது எண்டு. உண்மைதான் .


இப்பயெல்லாம் பாருங்கோ மனுஷரைக்கண்டு குழந்தைகள் பயப்படும் காலம் இந்த கொரோனாக் காலம். ஏன் எண்டால் அரசாங்கம் இப்ப ஒருத்தரையும் தேவையில்லாமல் போக கூடாது எண்டுட்டு அதிலயும் குழந்தைகள் பிறந்தால் தாய் தகப்பன் மட்டும் தான் அருகிலே போகலாம் கட்டி அணைக்கலாம் . அதோட செல்ல பிராணிகள் நாய் பூனைகள் கூட அருகிலே போகலாம் எங்கட உறவுகள் போக முடியாது .அப்படி போறன்டாலும் ஒருவர் மட்டும் தான் அதுவும் குறிப்பிட்ட நேரம் அதுவும் முக கவசம் போட்டு போகவேணும். இப்படி பே மாதிரி தான் நாங்கள் கலர் கலர் முக கவசத்தோட குழந்தைகளை பாக்கப்போனால் எப்படி குழந்தை சிரிக்கும் கத்தி கத்தி தான் அழும்.


அதாவது செல்ல பிராணிகளோட அன்பாக சிரிச்சு பழகும் குழந்தைகள் எமது அன்பு பாசம் அரவணைப்பு அடிக்கடி முகத்தை பார்க்க முடியாத நிலையில் எம்மை தவிர்த்து செல்ல பிராணிகளையே அன்பு செய்யும் நிலையில் குடும்ப உறவில் பல விரிசல்களை உருவாக்கு கின்றது.

அதாவது கொரோனா காலத்தில பேரப்பிள்ளைகளை பிள்ளை பிடிக்காரன் (முகக் கவசம் அணிந்து )போல பாக்க போனால் பிள்ளைகள் மனுஷர் உருவத்த கண்டே இனி பயப்படும் காலமாகிற்று .


உண்மையில எனக்கு பயமா இருக்கு கொரோனா காலத்தில குறிப்பாக வெளிநாட்டில பிறக்கிற குழந்தைகள் மனுஷரை ஏற்று கொள்ளுமா அல்லது பார்த்து பயப்படுமா எண்டு ?


எது எப்படி இருந்தாலும் எட்டி நிண்டாலும் கிட்ட நிண்டாலும் அழுதாலும் சிணுங்கினாலும் பேத்தி பேரக்குழந்தைகளுக்கு அடிக்கடி முகத்த காட்டுங்கோ அல்லது யார் எண்டே தெரியாமல் போடும்.

103 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: