இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்.

ஜெனரல் சவேந்திர சில்வா.

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. நேற்று 357 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இவர்களில் 260 பேர் ஏற்கனவே கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது எனவும் இராணுவத் தளபதி கூறினார்.


எனவே நாட்டு மக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

40 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: