- smithjayanth6
மன்னார் மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பூசி.

மன்னார் மாவட்டத்தில் எதிர் வரும் வாரம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக செயற்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் தலைமையில் இன்று வியாழக்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசினால் அமுல் படுத்தப்படுகின்ற ‘கொரோனா’ தடுப்பூசி எதிர் வருகின்ற வாரம் முதல் மக்களுக்கு செலுத்தப்பட உள்ளது. இதில் 30 மற்றும் 60 வயதிற்கு இடைப்பட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கும் அடுத்த வாரமே கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பான பொறிமுறைகள் ஆராயப்பட்டுள்ளது.
அதே நேரம் இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.