இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் மரணம்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.இப்பாகமுவ பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 538 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்று இதுவரையில் 302 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, நாட்டில் இதுவரை பதிவான கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 89,136 ஆக அதிகரித்துள்ளது.
0 views