கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு இறப்பு அபாயம் அதிகம்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு இறப்பு அபாயம் அதிகம் என்பதும், அவர்களுக்கு பயங்கரமான நோய்கள் ஏற்படுவதும் ஆய்வில் தெரியவந்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பயங்கர தொற்றில் இருந்து மீண்டவர்கள் பின்னர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அந்தவகையில் 87 ஆயிரம் கொரோனா நோயாளிகள் மற்றும் சுமார் 50 லட்சம் குணமடைந்தவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதன்படி முதலில் சுவாச மண்டலத்தை பாதிக்கும் வைரசாக இருக்கும் இந்த கொரோனா பின்னாட்களில் உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் மிகத்தீவிர நோய்களை பின்னாட்களில் கொரோனா உருவாக்குகிறது. இதன் மூலம் உலக மக்களுக்கு வருகிற ஆண்டுகளில் மிகப்பெரும் சுமையை கொரோனா ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

143 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: