கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் செல்லவும்.

இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்.

கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குச் செல்லுமாறு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின்படி 25 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.


கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங் களில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சல், நெஞ்சு வலி , உடல் வலி, மூட்டு வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் செல்லுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

32 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: