இந்தியாவில் தற்போது வேகமாகப் பரவி வரும் டீ.1.617 வகை கொரோனா.


இந்தியாவில் தற்போது வேகமாகப் பரவி வரும் டீ.1.617 வகை கொரோனா அமெரிக்கா, சிங்கப்பூர் எனக் குறைந்தபட்சம் 17 நாடுகளிலுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தற்போது இந்த வகை கொரோனா அதிகமாக பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இந்தியாவில் சில மாதங்களாகக் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது தற்போது தினசரி மூன்று லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.கொரோனா பரவல் இந்தியாவில் இப்படி திடீரென அதிகரிக்க இந்தியாவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா வகை காரணமாக இருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சமாக உள்ளது. முதல்கட்ட தகவல்களைக் கொண்டு ஆராயும்போது, இந்தியாவில் பரவும் கொரோனா வகை அதிகளவில் கண்டறியப்படுவதாகவும் இது வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

4 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: