ஒரேநாளில் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1662 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார்.


இதன்படி, இலங்கையில் ஒரேநாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இன்று கண்டறியப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து எட்டாயிரத்து 146 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் மேலும் 530 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 95ஆயிரத்து 975ஆகப் பதிவாகியுள்ளது.


மேலும், கொரோனாவால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 667ஆக உள்ள நிலையில், இன்னும் 11 ஆயிரத்து 504 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

49 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: