மூன்று மரபுக் கலப்புக் கொண்ட"வங்காளத் திரிபு" இந்தியாவில்!


மேற்கு வங்க மாநிலத்தில் புதிய "முத்தி ரிபு" (triple-mutation) வைரஸ் கிருமி ஒன்றைத் தாங்கள் அடையாளம் கண்டு பிடித்துள்ளனர் என்ற தகவலை அங்குள்ள நோய் ஆய்வு நிபுணர்கள் வெளியிட்

டுள்ளனர்.


கடந்த ஒக்ரோபரில் மகாராஷ்டிராவில் பரவத் தொடங்கிய இரட்டைத் திரிபு வைரஸ்(double mutant variant) இந்தியா வின் தொற்றாளர் எண்ணிக்கையைச் சமீப நாட்களாக உலக சாதனை அளவுக்கு உயர்த்திவிட்டுள்ளது. நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புகள் ஸ்தம்பித நிலையை எட்டி உள்ளன. இந்தக் கட்டத்தில் மூன்று திரிபுகளின் கலவையாக - மூன்று வித மரபுத் தன்மையை ஓர் உடலில்

கொண்ட 'முத்திரிபு'(triple-mutation)பற்றிய செய்தி வெளியாகி இருக்கிறது.

அதி வேகமாகப் பரவுதல், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியிடம் இருந்து தப்புதல்போன்ற தன்மைகளைக் கொண்ட இந்த கிருமியை "வங்காளத் திரிபு" (“Bengal strain”) என்று அழைக்கின்றனர்.


இங்கிலாந்து - பிறேசில் - தென்னாபிரிக்கா போன்ற மூன்று திரிபுகளினதும் கூட்டு வடிவமாகச் சந்தேகிக்கப்படும் முத்திரிபு, ஏற்கனவே வைரஸ் தொற்றியவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கும் மறுபடியும் தொற்றக் கூடிய வலிமை கொண்டதா என்ற அச்சம்

இந்திய நோயியல் நிபுணர்களிடையே எழுந்துள்ளது.

"நீங்கள் முதலில் வேறு ஒரு திரிபின்தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது நீங்கள் ஏற்கனவே தடுப்பூசி ஏற்றி இருந்தாலும் இந்த முத்திரிபு வை ரஸிடம் தப்ப முடியாது" "முத்திரிபு" பற்றிய அச்சத்தை இவ்வாறு வார்த்தைகளில் வெளியிட்டிருக்கிறார் தேசிய மரபு உயிரியல் மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த (National Institute of Biomedical Genomics) மருத்துவர் சிறிதர் சின்னஸ்வாமி.


எனினும் இந்த அச்சத்தை நிரூபிப்பதற்கான ஆய்வுகள் முற்றுப் பெறவில்லை. முத்திரிபு வைரஸின் மரபு வரிசை பற்றிய (genome sequencing) ஆராய்ச்சிகள் இனிமேல்தான் நடைபெறவுள்ளன.


இதேவேளை, இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மூன்று லட்சம் பேருக்கு (3,14,835) தொற்று கண்டறியப் பட்டுள்ளது. இந்தியாவிலும் உலகளாவிய ரீதியிலும் அதி கூடிய ஒரு நாள்தொற்று எண்ணிக்கை இது என்று கூறப்படுகிறது. புதன்கிழமை பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 104 ஆகும்.வைரஸ் அச்சத்தின் மத்தியில் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல்வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை நடைபெற்று வருகிறது.

8 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: