யாழ்ப்பாணம் பாற்பணை கிராமம் அனர்த்த வலயமாக அறிவிப்பு.

கொரோனா வைரஸ் அதிகரித்ததை அடுத்து, யாழ்ப்பாணம், திருநெல்வேலி பிரதேசத்திலுள்ள பாற்பணை கிராமம் அனர்த்த வலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குறித்த கிராமத்திலிருந்து வெளியேறுவதும், உள் நுழைவதும் மறுஅறிவித்தல் வரை தடை செய்யப்பட்டிருக்கிறது.
திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரி, முத்துத்தம்பி வித்தியாலயம் என்பன மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம், சுமார் 300 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்படுள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 244 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இதில், 127 பேர் திருநெல்வேலி பொதுச்சந்தையைச் சேர்ந்தவர்கள் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
147 views