திருகோணமலையில் கொரோனா அச்சம்: 03 பாடசாலைகள் மூடப்பட்டன.


திருகோணமலை மாவட்டத்தில், மூன்று பாடசாலைகள் திகதி குறிக்கப்படாது மூடப்பட்டுள்ளன என கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் கிரிஸ்டி லால் பெர்ணாந்து தெரிவித்துள்ளார்.


மஹாஓயா கல்வி வலயத்தில் குடா ஹரஸ்கல வித்தியாலத்தில் மாணவர்களில் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளர். அத்துடன், திருகோணமலை அபயபுரம் வித்தியாலயத்தின் அதிபருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதியானது. அதனையடுத்து அவ்விரு வித்தியாலயங்களும் மூடப்பட்டன.

சீனக்குடா தமிழ் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் மற்றும் ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதியானது அதனையடுத்து அப்பாட​சாலையும் மூடப்பட்டது.

அந்தப் பாடசாலைகளைச் சேர்ந்த ஏனைய மாணவ, மாணவிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதனால், மேற்படி மூன்று பாடசாலைகளையும் தற்காலிகமாக மூடிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுமாறு மாவட்ட பிரதிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வி.பிரேமானந்த் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

58 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: