தொற்று நோயின் பாதைவேகமாக விரிவடைகிறது

சுகாதார அமைப்பு அச்சம்

சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று கணக்குப்போட்டதற்கு மாறாகத் தொற்று நோயின் பாதை உலகெங்கும் வேகமாக விரிவடைந்து செல்கிறது. உலக சுகாதார நிறுவனம் தற்போதைய நிலைவரத்தை இவ்வாறு கணிப்பிட்டு எச்சரிக்கை செய்துள்ளது.


2019 டிசெம்பரில் வைரஸ் பரவத் தொட ங்கி சுமார் ஒன்றரை வருடங்கள் கடந்த பிறகும் உலகெங்கும் தொற்றுக்களும் மரணங்களும் அதிகரித்துச் செல்வது பெரும் கவலை அளிப்பதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

"18 மாதங்களில் பயனுள்ள தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக நாங்கள் அடைய முடியும் என நம்பிய பெறுபேறு இதுவல்ல" - என்று சுகாதார நிறுவனத் தின் தொழில் நுட்ப முகாமையாளர் Maria Van Kerkhove தெரிவித்துள்ளார்.தற்போ தைய நிலைமையை "கடுமையான கட்டம்"(critical point) என்று அவர் குறிப்பி ட்டார். இதேவேளை வழமையான செய்தியாளர் மாநாட்டில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus வைரஸ் தொற்றுக்கள் கடந்த ஏழுவாரங்களில் தொடர்ந்து அதிகரிப்பைக் காட்டி வருகின்றன என்றும் உலக அளவில் மரணங்கள் கடந்த நான்கு வாரகாலமாக உயர்ந்து செல்கிறது எனவும் குறிப்பிட்டார்.


"உலகம் முழுவதும் இதுவரை 780 மில்லியன் (780 million) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால் பல ஆசிய நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் தொற்று அதிகரித்துச் செல்கிறது" என்றும் அவர் தெரிவித்தார். தடுப்பூசி வலுவுள்ள, பிரதான ஆயுதம் என்றாலும் அது மட்டும் வைரஸைக் கட்டுப்படுத்தி விடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

" சமூக கட்டமைப்புகளும் பொருளாதார மும் மீளத் திறக்கப்படுகின்றன. பயணங்களும் வர்த்தக நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படுகின்றன.ஆனால் மருத்துவமனைகளின் அவசர பிரிவுகள் நிரம்புவதற்கும் மரணங்கள் அதிகரிப்பதற்கும் இவைகளே காரணமாகின்றன. எனவே இந்த இழப்புகள் தவிர்க்கக் கூடியவை" இவ்வாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

17 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: