ஏப்ரல் 26 முதல் இத்தாலியின் கொறோனா கட்டப்பாடுகள் தளர்வு!


கடந்த காலங்களில் கொள்ளைநோயின் நிமித்தம் அனைத்து துறைகளிலும் பாரியளவு பின்தங்கிய நிலையில் இருந்து எதிர்வரும் 26 April முதல் குறிக்கப்பட்ட செயல்திட்ட நடவடிக்கைகளில் ஒரு தளர்வு நிலை கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் கடந்தகாலங்களிலிருந்து ஒரு நம்பிக்கையுடன் எதிர்காலத்தை பார்க்கமுடியும் என்றும் இத்தாலியின் பிரதமர் Mario Draghi செய்தியாளர்களுக்கு அறிவித்துள்ளார்.


இதன் படி தடுப்பூசிகளின் முன்னேற்றம் படிப்படியாக அனைவர் மத்தியிலும் கட்டம் கட்டமாக பிரயோகிக்கப்படும் என்றும், எதிர்வரும் 26 சித்திரையில் இருந்து சிவப்பு வலயம் தவிர்ந்த மற்றைய பகுதிகளில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மீள்திறக்கப்படலாம் எனவும், எதிர்வரும் 15  மேயில் இரு‌ந்து நீச்சல் தடாகங்களும், ஆனிமாதம் தொடக்கம் உடற்பயிற்சி நிலையங்கள் திறக்கப்படும் எனவும் பிராந்தியங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கள் மீண்டும் அனுமதிக்கப்படும் எனவும் தளர்வு செயற்திட்ட அறிக்கை விபரிக்கின்றது.


தொடர்ச்சியாக நாட்டில் ஏற்பட்ட போராட்டங்களுக்கும், எதிர்ப்புக்களுக்கும் பிறகு இந்த தளர்வு நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. பல குழுக்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த போராட்டங்கள் வன்முறைகளாக மாறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


இந்த நேரத்தில் சர்வதேச பயணத்திற்கான தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான எந்த திட்டத்தையும் பிரதமர் குறிப்பிடவில்லை.


இதேவேளை பாதுகாப்பு படையினருக்கான தடுப்பூசித்திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் இது கோழைத்தனத்தினாலோ அல்லது பக்க விளைவுகள் ஏற்படுவதினாலும் அல்ல, 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கமே என பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகரான லெப்டினன்ட் கேணல் ஜியான்பிரான்கோ பக்லியா தெரிவித்துள்ளார்.


டென்மார்க்கில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள AstraZeneca தடுப்பூசிகளை என்ன செய்வது என்று அரசாங்கத்தினால் முடிவெடுக்காத நிலையில் பயன்படுத்தாத தடுப்பூசிகளை பதுக்கிவைக்க வேண்டாம் எனவும் EMA நாடுகளை வலியுறுத்து வருகின்றது. இந்த தடுப்பூசிகளை மீண்டும் தொடங்கலாமா? அல்லது முற்றிலுமாக நிறுத்தலாமா? என்பதை மதிப்பீடு செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும் என்று நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.


இந்நிலையில் வருமானம் குறைந்த நாடுகளுக்கு அதிகமான தடுப்பூசிகளை வழங்குமாறு உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் தெரிவித்துள்ளார்.

161 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: