இத்தாலியில் அதிகரித்துவரும் தொற்றுக்கள் முதல் அலையின் உச்சக்கட்டத்தைக் கடந்துவிட்டது!


இத்தாலியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றின் நிமித்தம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் தொகை மிகவும் சோகமான நிலையில் உள்ளது. இது 2020 முதல் கட்ட உச்சத்தை தாண்டியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.


மருத்துவமனைகள் மீதான அழுத்தம் மேலும் மேலும் அதிகரித்து வருகின்ற இந்த நிலையில் மார்ச் 29 திங்கள்கிழமை அன்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவல்கள் இன்னும் கடினமான சூழ்நிலையை விபரிக்கின்றன. கொரோனாவின் தொற்று விகிதம் ஒரு புள்ளி உயர்ந்து 8.2% ஐ எட்டுகின்ற அதேவேளை 3.5 மில்லியனை தாண்டியுள்ளதாகவும், இறப்புக்கள் 297 க்கு எதிராக ஒரு நாளில் 417 ஆக உயர்ந்திருப்பதும் இதுவரை 108,000 க்கு அதிகமானோர் இத்தொற்றின் நிமித்தம் இறந்திருப்பதும் கவலைக்குரியதே.


நாம் கொரோனாவிலிருந்து விலகி எப்போதும் இயல்பு வாழ்வுக்குள் திரும்புவோம் என்ற பீதி கலந்த துன்ப வாழ்வுக்குள்ளேயே மக்கள் இன்று அதிகமாக காணப்படுகின்றார்கள்.


இதேவேளை கடந்த 27 மார்ச் அன்று சிசிலி தீவுக்கு வருகை தந்த ஆன்டிகோவிட் நடவடிக்கை ஒருங்கிணைப்பாளர் Francesco Paolo சிசிலி நிலவரங்கள் குறித்து ஆராய்ந்த அதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஒரு மில்லியனுக்கு அதிகமான மாடர்னா மற்றும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் இத்தாலிக்கு வரவிருப்பதாகவும், முழு திறனில் இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இத்தாலிய தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இதுபற்றிய தவறான விபரங்களும் ஆங்காங்கே பரப்பப்படுவதினால் அதற்கெதிரான சட்ட நடவடிக்கைகளும் முடக்கிவிடப்பட்டுள்ளது.


சிவப்பு வலயங்களில் கடுமையான பாதுகாப்புகள் அமுல்படுத்தப்பட்டுள்ள அதே வேளை இங்கு தடுப்பூசி பிரச்சாரங்கள் முன்னேறி வருவதையடுத்து மருந்தகங்களில் தடுப்பூசியை நிர்வகிக்க ஒரு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன்படி இத்தாலியில் ஜெனோவாவில் முதல் மருந்தகம் நிறுவப்பட்ட அதேவேளை குறிக்கப்பட்ட மற்றைய பிராந்திய மருந்தகங்களின் நடைமுறைகள் பற்றியும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்போதுள்ள ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் EMA ஏற்கனவே சர்ச்சைக்குள்ளாக காணப்பட்ட AstraZeneca தடுப்பு ஊசி Vaxzevria எனும் புதிய பெயருடன் அறிமுகமாகியுள்ளது. தடுப்பூசியின் கலவை, அதன் செயற்திறன்களில் மாற்றம் இல்லாதிருக்கின்ற போதிலும் அதன் லேபிள் அமைப்பிலும் கையாளல் பாவனை படிவத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டு EMA இணையத்தில் வெளியிட்டுள்ளதும் அறிந்ததே.


இத்தாலியின் சிசிலி தீவில் தடுப்பூசிகளின் பற்றாக்குறையால் மிக சொற்பமானவர்களுக்கே இந்த தடுப்பூசிகள் இதுவரை ஏற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


இங்கு வாழும் இலங்கையர்கள் நிலைமை குறித்து பார்க்கையில் இத்தாலியின் மற்றைய பிராந்தியங்களை பார்க்கிலும் சிசிலி யில் தமிழர்கள் அதிகமாக வாழ்வதனால் இந்த கொரோனா தொற்றுக்கு அதிகமானவர்கள் பாதிக்கப்படுகின்ற அதேவேளை ஒரு சில இறப்புக்களே சம்பவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

145 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli