பிரித்தானியிவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளத்தப்பட்டுள்ளன.


பிரிட்டனில் கொரோனா தொற்று கட்டுபாட்டுள்குள் வந்துள்ளதால் மக்களுக்கு தேவையான தளர்வுகளை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது . கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து பிரிட்டனிலும் கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளது.

பிரிட்டனில் கடந்த சில வாரங்களாக 5,000க்கும் குறைவானவர்களே தினசரி கொரோனா பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரிட்டனில் 60 வீதம் கொரோனா தொற்று குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.கொரோனாதொற்றுப் பரவல் குறைந்துள்ளதன் காரணமாக பிரிட்டனில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.


இன்று முதல் அனைத்து கடைகளும் மீண்டும் இயங்கவும், மக்கள் நெருக்கமாக கூடும் இடங்களான ஜிம், முடி திருத்தும் நிலையங்களை திறக்கப்படவும், உணவகங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களை செயற்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.அத்தோடு நூலகங்கள், பொழுபோக்கு நிலையங்கள் இயங்கத்தொடங்கியுள்ளன.

திருமண விழாக்களில் பங்கேற்க 15பேருக்கு அனுமதியும் மரணமடைந்தவர்களின் இறுதிச் சடங்குகளில் 30 பேரு பங்கேற்க அனுமதியும் வழங்ப்பட்டுள்ளது.. கொரோனா ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தாலும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

3 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: