மரணங்கள் ஒரு லட்சத்தை எட்டியது ஒன்றாக அஞ்சலி செலுத்த ஏற்பாடு.


பிரான்ஸில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை ஓரிரு நாட்களில் ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்ட உள்ளது.


புதனன்று வெளியான உத்தியோகபூர்வ தரவுகளின் படி வைரஸ் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 99 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது. அது உச்ச அளவான ஒரு லட்சத்தை நெருங்கி விட்டது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துவதற்கு முன்னராகவே மரணங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இங்கிலாந்து(127,000),இத்தாலி (115,000) போன்ற ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து பிரான்ஸும் ஒரு லட்சத்துக்குக் கூடிய மரணங்களைச் சந்தித்த மூன்றாவது நாடாக வரிசைப்படுத்தப்படுகிறது.

அவசர சிகிச்சைப்பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆறாயிரத்தை எட்டி உள்ளது. தொற்றுநோய் தொடங்கிய பின்னர் ஏற்படுகின்ற மிக அதிக எண்ணிக்கை இதுவாகும்.


இறப்புகள் ஒரு லட்சத்தை எட்டுவதால் உயிரிழந்தவர்களுக்கு தேசிய அளவில் துக்கம் அனுஷ்டித்து அஞ்சலி செலுத்து வதற்கான ஒரு நாளை அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலிஸே மாளிகையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இந்த விடயமும் ஆலோசிக்க ப்படவுள்ளது என்று அரசாங்கப் பேச்சா ளர் கப்ரியேல் அட்டால் தெரிவித்துள் ளார். இதேவேளை, ஆண்டு தோறும் மார்ச் மாதம் 17 ஆம் திகதியை 'கோவிட் 19' தொற்று நோயால் உயிரிழந்தவர்களது நினைவு நாளாகப் பிரகடனப்படுத்துமாறு அரசிடம் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.பிரான்ஸில் கடந்த ஆண்டு முதலாவதுபொது முடக்கம் அறிவிக்கப் பட்ட நாள் மார்ச் 17 ஆகும்.

120 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: