பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க அரசாங்கம் தவறினால் நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறும்.

ஏப்ரல் குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க அரசாங்கம் தவறினால் நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறும் என பேராயர் கர்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது 2021 ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆணைக்குழுவால் குற்றவாளிகள் என பெயரிடப்பட்டவர்கள் மீது குறிப்பிட்ட தினத்துக்குள் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தொடரும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை குறித்த சம்பவத்திற்கு நீதி வழங்கப்படும்வரை பொதுமக்கள் தரப்பில் எப்போதும் நிற்பேன் என்றும் கர்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
19 views