கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியன்?


இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை ஒன்றினை முன்வைத்துள்ளார்.


அத்துடன், வடமாகாணசபை தேர்தலில் மாவை சேனாதிராசா களமிறக்கப்பட வேண்டும். கடந்த மாகாணசபை தேர்தலில் அவர் தனது இடத்தை விக்னேஸ்வரனிற்கு விட்டுக் கொடுத்தார். இம்முறை அப்படியான முடிவை எடுக்கக்கூடாது. அவரது தலைமையில் இளைஞர்களை களமிறக்க வேண்டும் எனவும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.


இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன், இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், அரியநேத்திரன், சிவமோகன், ஞா.சிறிநேசன்,மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், கே.சயந்தன், குருகுலராஜா, சட்டத்தரணி வி.தவராசா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன் மற்றும் பல கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

1 view
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli